October 21, 2020

முடிவுக்கு வருகிறது புகழ் பெற்ற ‘மணி ஹெய்ஸ்ட்’ தொடர்!!! வருத்ததில் ரசிகர்கள்!!!

ஸ்பேனிஸ் மொழியில் வெளியான புகழ் பெற்ற தொடரான மணி ஹெய்ஸ்ட் முடிவுக்கு வருகிறது.

ஸ்பெயினில் உள்ள ராயல் மிண்ட் எனும் பணம் அச்சடிக்கும் வங்கியைக் கொள்ளை நடிக்கத் திட்டமிடுகிறார் ப்ரொஃபஸர். அதற்காக ஒரு குழுவையும் உருவாக்குகிறார். ஊர்களின் பெயர்களைக் கொண்ட இவர்களின் குழு நபர்களுடன் இணைந்து கொள்ளை முயற்சியை மேற்கொள்கிறார்.

இந்த தொடர் நெட்பிளிக்ஸில் வெளியாகி உலக அளவில் புகழ் பெற்றது. இந்திய ரசிகர்களையும் விட்டு வைக்காத இந்தத் தொடர், ஊரடங்கில் மேலும் பிரபலமாகி பார்வையாளர்களை தன் வசம் ஈர்த்தது.

ப்ரொஃபஸர் கதாப்பத்திரத்திற்கு பலரும் அடிமையாகிப்போனார்கள் என்றே சொல்லும் அளவுக்கு அந்த தொடரின் தாக்கம் காணப்பட்டது.

சமீபத்தில் பிரபல யூடியூப் சேனல்  ஒன்று இதன் இயக்குநர் அலெக்ஸ் பினாவிடம் நடத்திய இணைய வழி பேட்டியில், இந்திய திரைப் பிரபலங்கள் சிலரின் புகைப்படங்களைக் காட்டி யாருக்கு என்னக் கதாபாத்திரம் கொடுக்கலாம் எனக் கேட்கப்பட்டது.

அதற்கு அவர், ப்ரொஃபஸார்- விஜய், போகாட்டா-அஜித், ஷாருக்கான் – பெர்லின், சூர்யா- காவல் துறை அதிகாரி, மகேஷ் பாபு-தமாயு, ரன்வீர் சிங்-டென்வர் என ஒவ்வொரு நடிகருக்கும் கதாப்பாத்திரங்களை பிரித்திருந்தார். இது ஹேஸ் டேக் மூலம் வைரலும் ஆனது. இத்தகைய வரவேற்பைப் பெற்ற மணி ஹெய்ஸ் தொடரின் நான்கு தொடர்கள் இதுவரை வெளியாகி இருக்கும் நிலையில் ரசிகர்களுக்கு அதிர்ச்சி தரும் செய்தி ஒன்றை நெட்பிளிக்ஸ் வெளியிட்டுள்ளது.

அதாவது ஐந்தாவது தொடரோடு மணி ஹெய்ஸ்ட் முடிவுக்கு வருவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இது இந்திய ரசிகர்களை மட்டுமல்ல உலக அளவில் மணி ஹெய்ஸ்ட் ரசிகர்களைக் கவலையில் ஆழ்த்தியுள்ளது. மணி ஹெய்ஸ்ட் ஹேஸ்டேக் மூலம் ரசிகர்கள் தங்களது வருத்தங்களை பதிவு செய்து வருகின்றனர்.

%d bloggers like this: