October 21, 2020

மிர்சா பூர் வலைதொடரின் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்தின் டிரெய்லர் வெளியாகி இருக்கிறது

மிர்சாபூர் என்பது மர்மங்கள் நிறைந்த குற்ற சம்பவங்களை கொண்ட அதிரடி வகையை சேர்ந்த வலைத் தொடராகும். இது 2018ஆம் ஆண்டு நவம்பர் 16 முதல் அமேசான் ஓ டி டி தளத்தில் ஒளிபரப்பாகியது. ஹிந்தி வலைத் தொடராகிய இது ரசிகர்களின் வரவேற்பை பெற்றது.

இந்த வலைத்தொடரை கரன் அன்சுமான் மற்றும் குர்மீத் சிங் ஆகியோர் இணைந்து இயக்கி இருந்தார்கள். எக்ஸல் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்த இந்த வலைத் தொடரில் மொத்தம் 9 எபிசோடுகள் உள்ளது. இதில் பங்கஜ் திரிப்பாதி, அலி ஃபாசல், விக்ராந்த் மாசே, திவ்யேண்டு ஷர்மா, ஸ்வேதா திரிப்பாதி, ரசிகா துகள் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

மிர்சாபூர் தொடரின் முடிவில் முன்னா என்பவன் பப்லூ மற்றும் ஸ்வீட்டியை கொலை செய்து விடுகிறான். இதனால் தனது வாழ்க்கையை இழக்கிறான் பப்லூவின் சகோதரன் குட்டு.

குட்டு தன் வாழ்க்கையையும் தனக்கு பாசமானவர்களையும் அழித்தவர்களை பழி வாங்கும் கதையாக மிர்சா பாகம் 2 தெரிகிறது. இதிலும் பங்கஜ் திரிப்பாதி, திவ்யேண்டு ஷர்மா, அலி பாஸல், ஸ்வேதா திரிப்பாதி, ரசிகா டுகள் மற்றும் பலர் நடித்துள்ளனர். ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே இதன் டிரெய்லர் வெளியாகி இருக்கிறது.

மேலும் அக்டோபர் 23 முதல் ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது அமேசான் பிரைம் ஓ.டி.டி தளத்தில் ஒளிபரப்பாகும் என நிர்வாக தகவல்கள் அறிவிக்கின்றது.

%d bloggers like this: