October 28, 2020

ரசிகர்களுக்கு நன்றித் தெரிவித்த அபிஷேக் பச்சன்!!!

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே பாலிவுட்டின் முன்னணி நடிகரான அபிஷேக் பச்சனும் நித்யா மே னனும் இணைந்து நடித்த த்ரில்லர் தொடரான “ப்ரீத் இன் டூ  தி ஷேடோஸ்” சீரீஸின் முதல் எபிசோட் நேற்று வெளியானது. வெளியானதைத் தொடர்ந்து நல்ல வரவேற்பையும் பெற்றது.

இது குறித்து நடிகர் அபிஷேக் பச்சன் தன் டிவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.

அதில் அவர் ‘ப்ரீத் இன் டூ  தி ஷேடோஸ்’க்கு நீங்கள் காட்டிய அன்பும் ஆதரவும் எனக்கு பெரும் மகிழ்ச்சி தந்தது. கடின உழைப்புக்குக் கிடைக்கும் நல்ல விமர்சனங்கள் தான் ஒரு நடிகராக எங்களுக்குக் கிடைக்கும் பெரும் மகிழ்ச்சி. உங்களுடைய அழகான கருத்துக்களைப் படிக்கும்போது மிகவும் ஆச்சரியமாகவும் மற்றும் உணர்வுப்பூர்வமாகவும் உள்ளது. இந்த புகழ் அனைத்தும் இயக்குநர் மாயங்க் ஷர்மா அவர்களையே சேரும்.

அவரது நம்பிக்கை அத்தகைய வழிகாட்டும் வெளிச்சமாக இருந்து வருகிறது. இந்த சீரீஸை அற்புதமாக மாற்றி ஓய்வில்லாமல் உழைத்த குழுவினருக்கும் மிக்க நன்றி. இது ஒரு அற்புதமான பயணமாக இருந்தது, பார்வையாளர்களான நீங்கள் தொடரைப் பார்த்து மகிழ்வீர்கள் என்று நம்புகிறேன். நீங்கள் காட்டிய அன்பும் ஆதரவும் ஊக்கமூட்டும் வகையிலிருந்தது. அன்புடன் அபிஷேக் பச்சன்’ என்று தெரிவித்திருக்கிறார்.

%d bloggers like this: