October 28, 2020

துல்கர் சல்மானின் “மணியரையிலே அசோகன்” திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியானது!!!

மலையாள மொழியில் காதல் கலந்த காமெடி திரைப்படமாக வெளிவரவிருக்கும் படம் தான் “மணியரையிலே அசோகன்”. இத்திரைப்படத்தை ஷம்ஸூ சைபா இயக்கியுள்ளார்.

வே ஃபேரர் ஃபிலிம்ஸ் பதாகையின் கீழ் நடிகர் துல்கர் சல்மான், ஜேக்கப் கிரிகோரியுடன் இணைந்து தயாரித்துள்ளார். ஸ்ரீஹரி கே.நாயர் இசையமைத்துள்ளார்.

இதில் ஜேக்கப் கிரிகோரி அவர்கள் கதையின் நாயகனாக நடித்துள்ளார். மேலும் அனுபமா பரமேஸ்வரன், ஷைன் டாம் சேகோ, கிருஷ்ணா ஷங்கர், அனு சித்தாரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இவர்களுடன் இணைந்து நடிகர் துல்கர் சல்மான் அவர்களும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

இத்திரைப்படத்தின் பாடல்கள் முன்னதாகவே வெளிவந்து ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. சில தினங்களுக்கு முன்னர் நடிகர் துல்கர் சல்மான் தனது டிவிட்டர் பக்கத்தில் “மணியரையிலே அசோகன்” திரைப்படம் ஆகஸ்ட் 31ந் தேதி நெட்ஃபிலிக்ஸ் இந்தியாவில் வெளியாக உள்ளது என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் இன்று தனது டிவிட்டர் பக்கத்தில் ‘மணியரையிலே அசோகன்’ என்ற ஹேஷ்டேகின் மூலம் “ஆச்சரியம் ஆச்சரியம்! மணியரையிலே அசோகன் திரைப்பட ட்ரெய்லர் முன்னதாகவே வெளியாகியுள்ளது. இப்போது அதை பாருங்கள்” என்று கூறி தனது யூடுயூப் சேனலில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்ட ட்ரெய்லரை பகிர்ந்துள்ளார்.

இத்திரைப்படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று ஆவலையும் தூண்டியுள்ளது.

%d bloggers like this: