October 21, 2020

”ஓரே புஜ்ஜிக்கா” திரைப்படத்தின் டிரெய்லரை வெளியிட்ட நாக சைதன்யா!!!

“ஒரே புஜிக்கா” தெலுங்குத் திரைப்படத்தின் டிரெய்லரை இன்று நடிகர் நாக சைத்தன்யா அக்கினேனி அவர்கள் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்.

இந்த திரைப்படத்தை இயக்குநர் கோண்டா விஜய் குமார் இயக்குகிறார். கேகே ராதா மோகன் அவர்கள் ஸ்ரீ சத்திய சாய் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரிக்கிறார். இதில் ராஜ் தருண் மாளவிகா நாயர் மற்றும் ஹேபா பட்டேல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும் இந்த திரைப்படத்திற்கு அனுப் ரூபன்ஸ் இசையமைத்திருக்கிறார்.

இந்த திரைப்படம் வரும் அக்டோபர் இரண்டாம் தேதி அன்று ஓடிடி தளத்தின் வாயிலாக வெளியிடப்படும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்த திரைப்படத்தின் டிரெய்லரை பார்க்கும்போது இது ஒரு நகைச்சுவை கலந்த காதல் காட்சிகளைக் கொண்ட திரைப்படமாக தெரிகிறது.

இந்த திரைப்படத்தின் டிரெய்லரை இன்று நடிகர் நாக சைத்தன்யா அக்கினேனி அவர்கள் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

%d bloggers like this: