October 21, 2020

திஷா எண்கவுன்டர் டிரெய்லர் நாளை காலை வெளியாகிறது!!!

இயக்குநர் ராம் கோபால் வர்மாவின் புதிய திரைப்படமாகிய திஷா எண்கவுன்டர் தெலுங்குத் திரைப்படத்தின் டிரெய்லர் நாளை காலை வெளியாக இருக்கிறது.

2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26ஆம் தேதியன்று தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ரங்கா ரெட்டி என்னும் மாவட்டத்தில் ஒரு கொடூர சம்பவம் நிகழ்ந்தது. விலங்குகள் மருத்துவராக பணிபுரியும் ஒரு பெண் மருத்துவரை லாரியில் பின்தொடர்ந்து வந்த கும்பல் கொடூரமான முறையில் துன்புறுத்தி கொலை செய்து எரித்தது. சில நாட்களுக்குப் பிறகு குற்றவாளிகளை கண்டுபிடித்த காவல்துறையினர் குற்றம் நடந்த சம்சா பாத் என்னும் இடத்திலேயே குற்றவாளிகளை எண்கவுன்டர் செய்தார்கள்.

இந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் திஷா என்கவுண்டர். அனுராக் கன்சர்லாவின் தயாரிப்பில் உருவாகும் இந்த திரைப்படத்தை இயக்குநர் ராம் கோபால் வர்மா அவர்கள் இயக்கியிருக்கிறார். இந்த படத்திற்காக ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இத்திரைப்படம் குற்றச் சம்பவம் நடந்த அதே நவம்பர் 26 அன்று வெளியிடப் போவதாகவும் இதன் டீசரை செப்டம்பர் 26 அன்று வெளியிடப்போவதாக படக்குழுவினர் திட்டவட்டமாக அறிவித்திருந்தார்கள். அதன்படி நாளை செப்டம்பர் 26 அன்று காலை 9.08 மணிக்கு இதன் டீசரை வெளியிடப்போவதாக தற்போது செய்திகள் வெளியாகி இருக்கிறது. குறிப்பாக காலை மணி 9.08 என்று நேரத்தை தெரிவித்து இருப்பதற்கு காரணம் என்ன என்பது தெரியவில்லை.

%d bloggers like this: