October 21, 2020

இன்று மதியம் ஒரு மணிக்கு ஒளிபரப்பாகும் “மிஸ் யூ வடிவேல் பாலாஜி” சிறப்பு நிகழ்ச்சி

நடிகர் வடிவேல் பாலாஜியின் இறப்புக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக விஜய் தொலைக்காட்சி இன்று மதியம் ஒரு மணி அளவில் “மிஸ் யூ வடிவேல் பாலாஜி ” என்னும் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்குகிறது.

வடிவேல் பாலாஜி தொலைக்காட்சி நடிகரும், திரைப்பட நடிகரும், மிமிக்ரி கலைஞரும் ஆவார். இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய கலக்கப்போவது யாரு, சிரிச்சா போச்சு, அது இது எது போன்ற நிகழ்ச்சிகளின் மூலம் பெரிதும் அறியப்பட்டவர். இவர் புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் குரலில் பேசி புகழ்பெற்றதன்மூலம் வடிவேல் பாலாஜி என்று அழைக்கப்பட்டார். மேலும் இவர் விஜய் தொலைக்காட்சியில் நடைபெற்றுவரும் ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியின் எட்டாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டிருக்கிறார்.

யாருடா மகேஷ், சுட்ட பழம் சுடாத பழம், கோலமாவு கோகிலா, முனி போன்ற திரைப்படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் இவர் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த மாதம் செப்டம்பர் 10ஆம் தேதியன்று மாரடைப்பு காரணமாக இவர் காலமானார். இவரது இழப்பு பல ரசிகர்களிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இவரது இழப்புக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக விஜய் தொலைக்காட்சியில் இன்று மதியம் ஒரு மணி அளவில் சிறப்பு நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது.

%d bloggers like this: