October 21, 2020

வெற்றிகரமாக 100 எபிசோடுகளை தொட்டது சித்தி 2

சித்தி 2 தொலைக்காட்சித் தொடர் 100 எபிசோடுகளை வெற்றிகரமாக கடந்துவிட்ட நிலையில் சித்தியாக நடித்து வரும் ராதிகா சரத்குமார் அவர்கள் சித்தி இரண்டு குழுவினருக்கும் ரேடான் நிறுவனத்திற்கும் பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

1999 முதல் 2001ஆம் ஆண்டு வரை சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய சித்தி மெகாத் தொடர் மக்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றது. இதில் நடிகை ராதிகா சரத்குமார் அவர்கள் சித்தியாக நடித்திருந்தார். தற்போது இதன் இரண்டாம் பாகம் ஒளிபரப்பாகி வருகிறது.

சித்தி இரண்டாம் பாகமாகிய சித்தி 2 ஜனவரி மாதம் 27-ம் தேதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது. 31 எபிசோடுகள் வரை சுந்தர் கே விஜயன் அவர்கள் இயக்கியிருந்தார். 32 வ்து எபிசோடிலிருந்து க.சுலைமான் பாபு அவர்கள் இயக்கி வருகிறார். ராதிகா சரத்குமார் நிழல்கள் ரவி நந்தன் லோகநாதன் பிரீத்தி ஷர்மா தர்ஷனா அஸ்வின்குமார் ஆகியோர் இதில் நடித்து வருகிறார்கள். இந்த தொடரை சன் என்டர்டெய்ன்மென்ட் மற்றும் ரேடான் மீடியா ஒர்க்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகிறது.

சாரதா என்னும் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த பெண் தனது குடும்பத்தின் மகிழ்ச்சிக்காகவும் நிம்மதி காகவும் பல சவால்களையும் பிரச்சினைகளையும் எதிர்கொள்வது போன்ற கதைகளை மையமாக கொண்ட இந்தத் தொடர். வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வந்த இந்த தொடர் மார்ச் 27 முதல் கொரோனா ஊரடங்கு மற்றும் கொரோனா நோய்த்தொற்று அச்சுறுத்தல் காரணமாக தனது ஒளிபரப்பை நிறுத்தி இருந்தது.

ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் சூழ்நிலையில் தற்போது மீண்டும் இது செப்டம்பர் 14 முதல் ஒளிபரப்பாக தொடங்கியது. இது திங்கள் முதல் சனி வரை இரவு ஒன்பது முப்பது மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.

I
இந்த தொடர் தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டு பின்னி 2 என்னும் பெயரில் ஜெமினி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது.

தற்போது இதன் படப்பிடிப்பு 100 எபிசோடுகளை கடந்து இருக்கும் சூழ்நிலையில் நடிகை ராதிகா சரத்குமார் அவர்கள் சித்தி-2 குழுவினருக்கும் ரேடான் நிறுவனத்திற்கும் பாராட்டுக்களை தெரிவித்திருந்தார். இதனை தொடர்ந்து நடிகர் மனோபாலா அவர்கள் இந்த சித்தி-2 குழுவினருக்கும் ரேடான் நிறுவனத்திற்கும் தனது பாராட்டுக்களை சமூக வலைத்தளங்களில் வாயிலாக தெரிவித்துள்ளார்.

%d bloggers like this: