October 28, 2020

பிக் பாஸ் சீசன் 14 நிகழ்ச்சியினை நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்குகிறார்

ஹிந்தியில் பிக் பாஸ் சீசன் 14 இன்று துவங்குகிறது. இதனை நடிகர் சல்மான்கான் அவர்கள் 11வது முறையாக தொகுத்து வழங்குகிறார். இதில் ஏஜா கான், நிக்கி தம்போலி, அபினவ் சுக்லா, ரூபினா திலக், ஜாஸ்மின் பாஸின் , நிஷாந்த் சிங் மல்கானி, ஷேசாத் டியொள், சாரா குற்பால், ஜான் குமார் சானு, பவித்ரா புணியா, ராகுல் வைத்தியா ஆகிய பதினோரு நட்சத்திரங்கள் கலந்து கொள்ளப் போவதாக தகவல்கள் அறிவித்துள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சி ஹிந்தியில் முதலில் 2006 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மூன்றாம் தேதி துவங்கப்பட்டது. 86 நாட்கள் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை அர்ஷாத் வர்ஷி அவர்கள் தொகுத்து வழங்கினார். 15 போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் வெற்றியாளராக ராகுல் ராய் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பிக் பாஸ் ஹிந்தி இரண்டாவது சீசன் 2008ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17 முதல் நவம்பர் 22 வரை நடைபெற்றது. இதனை சில்பா செட்டி அவர்கள் தொகுத்து வழங்கினார். 98 நாட்கள் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 15 போட்டியாளர்கள் கலந்துகொண்டார்கள். இந்த நிகழ்ச்சியில் வெற்றியாளராக அசுதோஷ் கௌஷிக் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அதன்பிறகு பிக்பாஸ் ஹிந்தியின் மூன்றாவது சீசன் 2009ஆம் ஆண்டு அக்டோபர் 4ஆம் தேதி முதல் டிசம்பர் 26 வரை மொத்தமாக 84 நாட்கள் நடைபெற்றது. 15 போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் வெற்றியாளராக விந்து தாரா சிங் அவர்கள் அறிவிக்கப்பட்டார். இந்த சீசனை நடிகர் அமிதாப்பச்சன் அவர்கள் தொகுத்து வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிக் பாஸ் ஹிந்தி நான்காவது சீசன் 2010 அக்டோபர் 3 முதல் 2011 ஜனவரி 8 வரை நடைபெற்றது. இதனை நடிகர் சல்மான் கான் அவர்கள் தொகுத்து வழங்கினார். 96 நாட்கள் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டார்கள். இதன் வெற்றியாளராக ஸ்வேதா திவாரி அவர்கள் தேர்வு செய்யப்பட்டார்.

பிக்பாஸ் ஹிந்தி சீசன் 5 நிகழ்ச்சி இரண்டாயிரத்து 11 அக்டோபர் 2 முதல் 2012 ஜனவரி 7 வரை மொத்தம் 98 நாட்கள் நடைபெற்றது. சஞ்சய் தத் மற்றும் சல்மான் கான் ஆகியோர் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்துகொண்டார்கள். இந்த நிகழ்ச்சியின் வெற்றியாளராக ஜூஹி பர்மார் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பிக் பாஸ் ஹிந்தி சீசன் 6 நிகழ்ச்சியை நடிகர் சல்மான் கான் அவர்கள் மொத்தமாக 97 நாட்கள் தொகுத்து வழங்கினார். 19 போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியின் வெற்றியாளராக ஊர்வசி தோலக்கியா அவர்கள் தேர்வு செய்யப்பட்டார். 2012 அக்டோபர் 7 முதல் 2013 ஜனவரி 12 வரை இது நடைபெற்றது.

பிக்பாஸ் ஹிந்தி ஏதாவது சீசனை நடிகர் சல்மான் கான் அவர்கள் தொகுத்து வழங்கினார். 2013 செப்டம்பர் 15 முதல் டிசம்பர் 28 வரை இது நடைபெற்றது. 23 போட்டியாளர்களை கொண்ட இந்த நிகழ்ச்சி 104 நாட்கள் நடைபெற்றது. இதன் வெற்றியாளராக கவாஹர்கான் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பிக் பாஸ் ஹிந்திசீசன் 8 நிகழ்ச்சியினை நடிகர் சல்மான் கான் அவர்கள் 2014 செப்டம்பர் 21 முதல் 2015 ஜனவரி 3 வரை தொகுத்து வழங்கினார். 104 நாட்கள் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 19 போட்டியாளர்கள் கலந்துகொண்டார்கள். இதன் வெற்றியாளராக கரிஷ்மா தன்னா அவர்கள் அறிவிக்கப்பட்டார்.

பிக்பாஸ் ஹிந்தியின் ஒன்பதாவது சீசனை சல்மான் கான் அவர்கள் தொகுத்து வழங்கினார். இந்த நிகழ்ச்சி அக்டோபர் 11 2015 முதல் 23 ஜனவரி 2016 வரை நடைபெற்றது. 105 நாட்கள் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 20 போட்டியாளர்கள் கலந்து கொண்டார்கள். இதன் வெற்றியாளராக பிரின்ஸ் நரூலா அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பிக்பாஸ் ஹிந்தியின் பத்தாவது சீசனை நடிகர் சல்மான் கான் அவர்கள் தொகுத்து வழங்கினார். இது 2016 அக்டோபர் 16 முதல் 2017 ஜனவரி 29 வரை மொத்தம் 105 நாட்கள் நடைபெற்றது. பதினெட்டு போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் மான்வீர் குஜார் வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பிக்பாஸ் ஹிந்தியின் பதினோராவது சீசனை நடிகர் சல்மான் கான் அவர்கள் தொகுத்து வழங்கினார். இது 2017 அக்டோபர் 1 முதல் 2018 ஜனவரி 14 வரை ஒளிபரப்பாகியது. 105 நாட்கள் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 19 போட்டியாளர்கள் கலந்துகொண்டார்கள். இதன் வெற்றியாளராக ஷில்பா சிந்தி அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பிக்பாஸ் ஹிந்தியின் பன்னிரண்டாவது சீசனை நடிகர் சல்மான்கான் தொகுத்து வழங்கினார். இந்த நிகழ்ச்சி 2017 செப்டம்பர் 16 முதல் 2017 டிசம்பர் 30 வரை நடைபெற்றது. 105 நாட்கள் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 20 போட்டியாளர்கள் கலந்து கொண்டார்கள். இதன் வெற்றியாளராக தீபிகா காக்கர் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பிக்பாஸ் ஹிந்தியில் 13வது சீசனையும் நடிகர் சல்மான் கான் அவர்கள் தொகுத்து வழங்கினார். 2019 செப்டம்பர் 29 முதல் இரண்டாயிரத்தி 20 பிப்ரவரி 15 வரை 140 நாட்கள் ஒளிபரப்பாகியது. 22 போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் வெற்றியாளராக சித்தார்த் சுக்லா அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் 14வது சீசன் இன்று துவங்க இருக்கிறது. இந்த நிகழ்ச்சியையும் நடிகர் சல்மான்கான் அவர்களே தொகுத்து வழங்குவதாக இருக்கிறது. தற்போதைய நிலவரப்படி இந்த நிகழ்ச்சியில் 11 போட்டியாளர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.



%d bloggers like this: