October 21, 2020

சாந்தனு வெளியிட்ட பஃர்ஸ்ட் லுக் போஸ்டர்!!!

கொரோனா பரவல் காரணமாக 120 நாட்களுக்கும் மேலாக திரையரங்கங்கள் மூடப்பட்டுள்ளது. திரையரங்கங்கள் திறக்கப்படுவது குறித்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளிவரவில்லை. இதற்கிடையே இன்று தமிழகத்தில் திரையரங்கங்கள், வணிக வளாகங்கள் தற்போதைக்கு திறக்க வாய்ப்பில்லை என்று செய்திகள் வெளியாகியிருக்கிறது.

ஊரடங்கில் முழுவதுமாக முடங்கிப் போன திரைத்துறையினர் தங்களது அடுத்தப் பட அறிவிப்புகள், பாடல் வெளியீடுகள், போஸ்டர் அறிவிப்பு என அனைத்தையுமே இணையம் வாயிலாக வெளியிட்டு வருகின்றனர்.

சில படங்கள் இணைய வெளியிட்டில் இறங்கி ஓடிடி தளங்களில் வெளியாகி வருகிறது.

இதற்கிடையே சாந்தனு இன்று தனது டிவிட்டர் பக்கத்தில், புதிய படத்தின் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பாயிண்ட் கலிமியர் பிலிம்ஸ் மற்றும் ருத்ரபாத் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகும் ‘கோடியக்கரை’ திரைப்படத்தின் பஃர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு படக்குழுவினருக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

வி.கே.சவுத்ரி மற்றும் சங்கர் இணைந்து இயக்கும் இந்தப் படத்தில், ராமன் பாலா மற்றும் முராரி குமார் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

%d bloggers like this: