October 29, 2020

பவன் கல்யாணின் பிறந்த நாளில் வெளியான ‘வக்கீல் ஸாப்’ படத்தின் மோஷன் போஸ்டர்!!!

தெலுங்குத் திரையுலகில் முன்னணி நடிகர்களுள் ஒருவர் பவர் ஸ்டார் என்று அழைக்கப்படும் பவன் கல்யாண். இவர் இன்று தனது 49வது பிறந்த நாளைக் கொண்டாடி வருகிறார். பல பிரபலங்களும் ரசிகர்களும் தங்களின் வாழ்த்துக்களை அவருக்குத் தெரிவித்து வருகின்றனர்.

பவன் கல்யாண் நடிப்பில் விரைவில் வெளிவர இருக்கும் திரைப்படம் வக்கில் ஸாப். இந்தப் படம் அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியான பிங்க் படத்தின் தெலுங்கு ரீமேக் ஆகும். பிங்க் படத்தின் தமிழ் ரீமேக்காக அஜித், ஸரதா ஶ்ரீநாத், வித்யா பாலன் நடிப்பில் நேர்கொண்ட பார்வை கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது தெலுங்கிலும் இந்தப் படம் ரிமேக் ஆகிறது. தெலுங்கில் வேணு ஶ்ரீ ராம் இயக்குகிறார். தமன் இசையமைக்கிறார். நிவேதா தாமஸ், அஞ்சலி, அனன்யா ஆகியோர் பவன் உடன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

பவன் கல்யாணின் பிறந்த நாளை முன்னிட்டு இந்தப் படத்தின் மோஷன் போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது. சத்யமேவ ஜெயதே என்ற வார்த்தையுடன் பின்னணி இசையில் இந்த மோஷன் போஸ்டர் வெளியாகி உள்ளது. இதை அவரின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து பவனின் பிறந்த நாளைக் கொண்டாடி வருகின்றனர் .


%d bloggers like this: