January 18, 2021

படப்பிடிப்பை முடித்த நாக சைதன்யா மற்றும் சாய் பல்லவி நடிக்கும் ”லவ் ஸ்டோரி” படக்குழு!!!

சேகர் கம்முலா எழுத்து இயக்கத்தில், நாராயண் தாஸ் நரங், பி.ராம் மோகன் ராவ் தயாரிப்பில், நாக சைதன்யா, சாய் பல்லவி நடிப்பில் வெளிவரவிருக்கும் தெலுங்கு மொழித் திரைப்படம் லவ் ஸ்டோரி. பவன் இசையில், விஜய் சி.குமார் ஒளிப்பதிவில், மார்த்தண்ட் கே.வெங்க்டேஷ் எடிட்டிங்கில் வெளிவரவிருக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த வருடம் செப்டம்பர் மாதம் ஹைதராபாத்தில் துவங்கிய நிலையில், அடுத்தக்கட்ட படப்பிடிப்பிற்காக பிப்ரவரி மாதம் துபாய் சென்றனர். பின்னர் கொரோனா பரவலில் காரணமாக படப்பிடிப்பு அதே மாதத்தில் நிறுத்தப்பட்டது.

பின்னர் செப்டம்பரில் இதன் படபிடிப்பு மீண்டும் துவங்கியது. இதற்கிடையே தற்போது லவ் ஸ்டோரி படக்குழு தனது படப்பிடிப்பை முடித்துள்ளது. விரைவில் இந்தப் படத்தின் டீசர் அல்லது டிரெய்லர் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

%d bloggers like this: