October 29, 2020

பிரபாஸ் மற்றும் தீபிகா படுகோன் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட்!!!

“பாகுபலி” திரைப்படத்தின் மூலம் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் புகழ்பெற்ற கதாநாயகனான பிரபாஸின் புதிய படம் பற்றிய அறிவிப்பு நாளை வெளியாகவுள்ளது.

“பாகுபலி” படத்துக்கு பின்னர் சாஹோ என்ற படத்தில் நடித்த பிரபாஸ், அதனைத் தொடர்ந்து ‘ராதே ஷ்யாம்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி, ஓம் ராட் இயக்கத்தில் உருவாகும் ‘ஆதிபுருஷ்’ திரைப்படமும் பிரபாஸ் கைவசம் உள்ளது.

‘ராதே ஷ்யாம்’ படத்தை அடுத்து நாக் அஸ்வின் இயக்கத்தில் வைஜெயந்தி மூவிஸ் தயாரிப்பில் பிரபாஸ் நடிக்க உள்ளார். இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த ஜூலை மாதம் வெளியானது. இந்த திரைப்படம் பிரபாஸ் அவர்களுக்கு 21-வது படமாகும்.

இத்திரைப்படத்தில், முதன்முறையாக பிரபாஸுக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகையான தீபிகா படுகோன் நடிக்கவுள்ளார். இது தீபிகா படுகோன் நடிக்கும் முதல் தெலுங்குப் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

அறிவியல் பின்னணியில் இந்தப் படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. ‘நடிகையர் திலகம்’ திரைப்படத்தை இயக்கி தேசிய விருது பெற்ற இயக்குநர் நாக் அஸ்வின் இந்தத் திரைப்படத்தை இயக்குகிறார்.

வைஜெயந்தி மூவீஸின் 50வது வருடத்தில் இந்த மெகா பட்ஜெட் படம் உருவாகவுள்ளது. மேலும் தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளில் உருவாகிறது என்பது கூடுதல் சிறப்பு. இதனால் அனைத்து மொழி ரசிகர்களுமே மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். மேலும், படத்தை பற்றிய தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று தெரிவித்திருந்தனர்.

அதனை தொடர்ந்து, அறிவிப்புக்காக ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், இன்று வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் தனது டிவிட்டர் பக்கத்தில், நாளை காலை 10 மணிக்கு ஒரு மிகப்பெரிய அறிவிப்பு வெளிவரவிருக்கிறது என்று கூறியுள்ளது. இதனால் ரசிகர்கள் என்ன செய்தியாக இருக்கும் என்று எதிர்பார்த்துள்ளனர்.

%d bloggers like this: