October 31, 2020

19 ஆவது திருமண நாளைக் கொண்டாடிய கிச்சா சுதீப்

கன்னடத் திரையுலகில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக வலம் வருபவர் நடிகர் கிச்சா சுதீப். 2001ஆம் ஆண்டு வெளிவந்த ஹுச்சா திரைப்படத்தில் கிச்சா என்ற கதாபாத்திரத்தின் மூலம் அனைவராலும் அறியப்பட்டு ரசிகர்களையும் கவர்ந்து இன்று கிச்சா சுதீப் என்று அழைக்கப்படுகிறார்.

கன்னட மொழியில் சிறந்த நடிகருக்கான ஃபிலிம் ஃபேர் விருதுகளையும் பெற்றுள்ளார். கன்னடம் மட்டுமின்றி தெலுங்கு, தமிழ் மற்றும் ஹிந்தி மொழிகளிலும் நடித்து அனைத்து ரசிகர்களையும் கவர்ந்துள்ளார்.

தற்போது அனுப் பந்தாரி இயக்கத்தில், அஜனீஸ் லோக்நாத் இசையில், ஜேக் மஞ்சுநாத் தயாரிப்பில் உருவாகிவரும் த்ரில்லர் திரைப்படமான “பேந்தோம்” என்ற திரைப்படத்தில் கிச்சா சுதீப் அவர்கள் விக்ராந் ரோனா என்றக் கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இன்று இவருடைய திருமண நாளாகும். இவருக்கு திருமணமாகி 19 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் வகையில் நடிகர் சுதீப் அவர்கள் தனது மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து தன்னுடைய மனைவிக்கு தன்னுடைய வாழ்வில் ஒரு தோழியாகவும் நல்ல துணையாகவும் இருந்து வருவதைப் பற்றி நன்றித் தெரிவித்துள்ளார்.

%d bloggers like this: