October 21, 2020

நிவின் பாலியின் பிறந்த நாளில் வெளியான படவேட்டு மேக்கிங் காணொளி…

மலர்வாடி ஆர்ட்ஸ் கிளப் திரைப்படத்தின் மூலம் மலையாளத் திரையுலகிற்கு நடிகராக அறிமுகமான நிவின் பாலி இன்று தனது 36வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.

வளர்ந்து வரும் முன்னனி நடிகர்களில் ஒருவரான நிவின் பாலி இந்த வருடம் மட்டும் துறமுகம், கெளரி, படவேட்டு, பிஸ்மி ஸ்பெஷல், கேங்ஸ்டர் ஆஃப் முண்டன்மாலா ஆகிய படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.

இதற்கிடையே இன்று நிவின்பாலியின் பிறந்த நாளை சிறப்பிக்கும் வகையில் படவேட்டு திரைப்படத்தின் மேக்கிங் காணொளியை வெளியிட்டுள்ளனர்.

லிஜூ கிருஷ்ணா இயக்குநராக அறிமுகமாகும் இந்த திரைப்படத்தின் மூலம் சன்னி வெய்ன் தயாரிப்பாளராக அறிமுகமாகிறார். நிவின் பாலியுடன் இணைந்து, மஞ்சு வாரியார், அதிதி பாலன் உள்ளிட்டோர் இணைந்து நடித்துள்ளனர்.

இன்று பிறந்த நாளைக்கொண்டாடும் நிவின் பாலிக்கு மோகன் லால் உள்ளிட்ட பிரபலங்கள் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

%d bloggers like this: