நவம்பர் 9ஆம் தேதி வெளியாகிறது காஞ்சனா திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக்கான லக்ஷ்மி!!!

ராகவா லாரண்ஸ் இயக்கத்தில், பாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோஸ், அக்ஷய் குமார், சபீனா கான், துஷார் கபூர் ஆகியோரின் இணைத் தயாரிப்பில், ரகவா லாரண்ஸ், ஃபர்ஹட் சம்ஜி, ஸ்பார்ஸ் கேட்டர்பால், டஷா பாம்ரா ஆகியோரின் வசனத்தில், அக்ஷய் குமார், கீரா அத்வானி நடிப்பில் வெளிவரவிருக்கும் இந்தி மொழித் திரைப்படம் லக்ஷ்மி. 2011ஆம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படமான காஞ்சனா திரைப்படத்தின் ரீமேக்காகும்.
முன்னர் லக்ஷ்மி பாம்ப் என்ற பெயரில் வெளியாக இருந்த இந்த திரைப்படம் சில காரணங்களால் லக்ஷ்மி என்றப் பெயரில் வெளியாக இருக்கிறது. லக்ஷ்மி தீபாவளிக்கும் சில தினங்களுக்கு முன் நவம்பர் 9ஆம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் வெளியாக இருக்கிறது. இதனை முன்னிட்டு புதிய போஸ்டர் ஒன்றினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.