November 30, 2020

நானியின் எஸ்.எஸ்.ஆர் படப்பிடிப்பு டிசம்பரில் துவங்குகிறது!!!

நானி நடிக்கவிருக்கும் புதிய திரைப்படம் ஷ்யாம் சிங் ராய். நிஹாரிகா எண்டர்டெயின்மெண்ட் பதாகையின் கீழ் வெங்கட் போயன்னபள்ளி தயாரிப்பில் ராகுல் சாங்ரித்யான் இயக்கத்தில் தயாராக இருக்கும் இந்தப் படத்தில் நானியுடன் இணைந்து சாய் பல்லவி, க்ரித்தி ஷெட்டி உள்ளிட்டோர் இணைந்து நடிக்கின்றனர்.

மிக்கி ஜே மேயார் இசையமைக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு இந்த வருடம் டிசம்பர் மாதம் துவங்க இருக்கிறது. விரைவில் இந்தப் படத்தை பற்றிய மற்ற அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  ராகுல் சாங்ரித்யாயன் ஏற்கனவே விஜய் தேவரகொண்டாவை வைத்து டாக்ஸி வாலா திரைப்படத்தை இயக்கியவர் என்பவர் என்பது குறிப்பிடத்தக்கது. நானி தற்போது டக் ஜெகதீஸ் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு முடிந்ததும் ஷ்யாம்சிங் ராய் திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

%d bloggers like this: