October 21, 2020

உதயா திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது!!!

மலையாள திரைப்படமான உதயா திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி இருக்கிறது.

டபுள்யூ எம் மூவீஸ் பதாகையின் கீழ் ஜோசுக்குட்டி மடத்தில் தயாரிப்பில், டினி டாமின் இணை தயாரிப்பில், சூரஜ் வெஞ்சராமுடு மற்றும் ஸ்ரீநாத் பாஷி ஆகியோர் இணைந்து நடிக்கும் இந்த திரைப்படத்தை இயக்குநர் தீரஜ் பாலா அவர்கள் எழுதி இயக்குகிறார். இசையமைப்பாளர் ஜேக்ஸ் பீஜாய் அவர்கள் இசையமைத்திருக்கிறார்.

இந்த படத்தில் நடிக்கும் சூரஜ் வெஞ்சராமுடு அவர்கள் ஆரம்பகாலத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நகைச்சுவை கலைஞராக இருந்து பின்னாளில் திரைத்துறைக்கு அறிமுகமானார். இவர் 250க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் மூன்று முறை கேரள மாநிலத்தின் சிறந்த நகைச்சுவை நடிகருக்கான மாநில விருதுகள் பெற்றிருக்கிறார். மேலும் பேரறியாதவர் திரைப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்றிருக்கிறார்.

உதயா திரைப்படத்தின் மற்றும் ஒரு நாயகனான ஸ்ரீநாத் பாஷி நடிகர் மட்டுமின்றி ஒரு இசைக்கலைஞரும் ஆவார். இவர் திரைத் துறைக்கு வருவதற்கு முன் வானொலி தொகுப்பாளராக பணியாற்றினார். 2012ஆம் ஆண்டு வெளிவந்த டா தடியா திரைப்படத்தின் மூலம் பெரிதும் அறியப்பட்டவர்.

சூரஜ் வெஞ்சராமூடு மற்றும் ஸ்ரீநாத் பாசி இணைந்து நடிக்கும் உதயா திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வெளியாகி இருக்கிறது. இது விளையாட்டை மையப்படுத்திய படமாக இருக்கலாம் என்றுக் கருதப்படுகிறது.

%d bloggers like this: