October 29, 2020

த்ரிஷ்யம்2 படப்பிடிப்பு தளத்திலிருந்து மோகன்லால் வெளியிட்ட புகைப்படம்!!!

2013ஆம் ஆண்டு மோகன்லால் நடிப்பில் வெளியான மெகாஹிட் த்ரில்லர் திரைப்படம் த்ரிஷ்யம். ஜீத்தூ ஜோசப் இயக்கத்தில், ஆண்டனி பெரம்பாவூர் தயாரிப்பில் மோகன் லாலுடன் மீனா, அனிஷா ஹாசன், எஸ்தர் அனில் உள்ளிட்டோர் இணைந்து நடித்திருந்தனர்.

மலையாளத்தில் வெளியாகி வெற்றியடைந்ததைத் தொடர்ந்து தமிழ் மற்றும் ஹிந்தியில் வெளியாகி வெற்றியும் பெற்றது.

இதற்கிடையே மீண்டும் த்ரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க முடிவு செய்யப்பட்டு மீண்டும் மோகன்லால், மீனா கூட்டணியில் தயாராகி வருகிறது. இதற்கிடையே மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் தற்போது த்ரிஷ்யம் 2 படப்பிடிப்பு தளத்திலிருந்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கொரோனா சோதனை விதிமுறைகளுக்குட்பட்டு மோகன் லாலுக்கு சோதனை செய்யும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

%d bloggers like this: