January 18, 2021

தெலுங்கில் ரீமேக்காகிறது லூசிஃபர்!!! மோகன்ராஜா இயக்கத்தில் நடிக்கும் சிரஞ்சீவி!!!

பிரித்விராஜ் இயக்கத்தில், மோகன் லால், மஞ்சு வாரியார், விவேக் ஓபராய் நடிப்பில் கடந்த ஆண்டு மலையாளத்தில் வெளியாகி வெற்றிப் பெற்றத் திரைப்படம் லூசிஃபர். உலக அளவில் 200கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டிய இந்தப் படம் தற்போது தெலுங்கில் ரீமேக்காக இருக்கிறது. ஜெயம், எம்.குமரன் சன் ஆஃப் மஹாலஷ்மி, சம்திங் சம்திங், சந்தோஷ் சுப்ரமணியம், வேலாயுதம், தனி ஒருவன், வேலைக்காரன் என தொடர்ந்து வெற்றிப் படங்களை இயக்கிய மோகன் ராஜா இந்தப் படத்தை தெலுங்கில் ரீமெக் செய்ய இருக்கிறார்.

தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி இந்தப் படத்தில் முக்கியக் கதாப்பாத்திரத்தை ஏற்று நடிக்க இருக்கிறார். சிரஞ்சீவி தற்போது ஆச்சார்யா படத்தில் நடித்து வருவதால் இதன் படப்பிடிப்பு முடிந்ததும் லூசிஃபர் ரீமேக்கில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

%d bloggers like this: