October 28, 2020

கேரள மாநில அரசின் விருதுகள்2020 அறிவிக்கப்பட்டுள்ளது!!!

இந்த வருடத்திற்கான கேரள மாநில அரசின் விருதுகள்(2020) அறிவிக்கப்பட்டுள்ளது. 50வது முறையாக வழங்கப்படும் இந்த விருதுகளை, சிறந்த நடிகருக்கான விருதை சூரஜ் வெஞ்சரமுண்டுவும், சிறந்த நடிகைக்கான விருதை கனி கஸ்ருதி அவர்களும், ஸ்பெஷல் ஜூரி விருது நிவின் பாலி மற்றும் அன்னா பென்னுக்கும், கேரக்டர் ஆர்டிஸ்டிக்கான விருது பகத் பாசிலுக்கும், சிறந்த படமாக வசந்தி படமும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

மேலும் சிறந்த இயக்குநருக்கான விருது லிஜோ ஜோஸ் பெரியசாமிக்கு ஜல்லிக்கட்டு திரைப்படத்திற்காகவும் வழங்கப்பட்டுள்ளது.

மோகன்லாலின் திரைப்படமான மரக்கர்; அரபிக்கடலிண்டே சிம்ஹம் திரைப்படம் மூன்று விருதுகளை தட்டிச் சென்றுள்ளது. சிறந்த பின்னனி குரல் கொடுப்பவர்களுக்கான விருதை வினீத்தும், நடன இயக்குநருக்கான விருது பிருந்தா மாஸ்டருக்கும், பிரசன்னாவிற்கும் வழங்கப்பட்டுள்ளது. விஷூவல் எஃபெக்ஸ்ட் கலைஞருக்கான விருதை சித்தார்த் ப்ரிய தர்ஷனுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

%d bloggers like this: