January 18, 2021

இந்தியாவின் அதிகாரபூர்வ நுழைவாக ஆஸ்கருக்கு சென்ற ஜல்லிக்கட்டு திரைப்படம்!!!

லிஜோ ஜோஸ் பெல்லிசெரி இயக்கத்தில், ஓ.தாமஸ் பனிக்கர் தயாரிப்பில், எஸ்.ஹாரிஸ் மற்றும் ஆர்.ஜெயக்குமார் வசனத்தில், ஆண்டனி வர்க்கீஸ், செம்பன் வினோத் ஜோஸ், சபுமோன் அப்துசமத் ஆகியோரின் நடிப்பில், பிரசாந்த் பிள்ளையின் இசையில், கிரிஸ் கங்காதரன் ஒளிப்பதிவில், தீபு ஜோசப் எடிட்டிங்கில் கடந்த ஆண்டு மலையாளத்தில் வெளியான திரைப்படம் ஜல்லிகட்டு.

இந்தப் படம் வெளியாகி நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றதோடு வசூலையில் ஈட்டித் தந்தது. 3கோடி பட்ஜெட்டில் உருவான இந்தப் படம் 20கோடி வசூலை ஈட்டியது. ”ஜல்லிக்கட்டு” 2019 செப்டம்பர் 6ஆம் தேதி 2019 டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு பரவலான விமர்சனங்களைப் பெற்றது. 24வது பூசன் சர்வதேச திரைப்பட விழாவில் ‘ஆசிய சினிமாவில் ஒரு சாளரம்’ என்ற பிரிவின் கீழ் படம் காட்சிப்படுத்தப்பட்டது. இது அக்டோபர் 4, 2019 அன்று கேரளாவில் வெளியிடப்பட்டது. இந்தியாவின் 50வது சர்வதேச திரைப்பட விழாவில் லிஜோ ஜோஸ் பெல்லிசெரி சிறந்த இயக்குநருக்கான விருதை வென்றார்.

இதற்கிடையே இந்தப் படம் தற்போது 93வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் சிறந்த சர்வதேச திரைப்படத்திற்கான இந்தியாவின் அதிகாரப்பூர்வ நுழைவாக தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. இதனை மலையாளத் திரையுலகினரும், ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர்.

%d bloggers like this: