36 வயதினிலே இயக்குநருடன் கைக்கோர்க்கும் துல்கர் சல்மான்!!!

மலையாளத் திரையுலகின் வளர்ந்து வரும் நடிகரான துல்கர் சல்மான் தற்போது குரூப் என்ற மலையாளப் படத்திலும், வான், ஹேய் சினாமிகா ஆகிய தமிழ்ப் படங்களிலும் நடித்து வருகிறார். இதற்கிடையே தற்போது புதியப் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
36 வயதினிலே, காயம் குளம் கொச்சுனி, பிரதி பூவன்கோழி ஆகியப் படங்களை இயக்கிய ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் துல்கர் சல்மான். சல்யூட் என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு அடுத்த் ஆண்டு ஜனவரி மாதம் துவங்க இருக்கிறது. இந்தப் படத்தைப் பற்றிய மற்றத் தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.