October 28, 2020

அட்ராங்கி ரே படப்பிடிப்பு தளத்திலிருந்து வெளியான தனுஷின் புகைப்படம்!!!!

நடிகர் தனுஷ் தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஜகமே தந்திரம் திரைப்படத்திலும், ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் அட்ராங்கி ரே திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

ரோமாண்டிக் திரைப்படமான இந்த இந்திப் படத்தை டீ சீரிஸ், கலர் யெல்லோவ் ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் கேப் ஆஃப் குட் பிலிம் இணைந்து தயாரித்திருக்கிறது.

தனுஷ் ஏற்கனவே ரான்ஜானா, ஷமிதாப் ஆகிய இந்தி திரைப்படங்களில் நடித்திருந்த நிலையில் இது தனுஷ் நடிக்கும் மூன்றாவது இந்தி திரைப்படமாகும்.

இந்தப் படத்தில் தனுஷுடன் இணைந்து சாரா அலிகான், அக்ஷய் குமார் ஆகியோர் நடித்துள்ளனர். பங்கஜ் குமார் ஒளிப்பதிவில், ஹோமல் கோத்தாரியின் எடிட்டிங்கில், ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவாகி வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைப்பெற்று வருகிறது. இதற்கிடையே தனுஷ் தற்போது படப்பிடிப்பு தளத்திலிக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி இருக்கிறது.

%d bloggers like this: