October 28, 2020

விரைவில் வெளியாகும் ‘பாய்சன் 2’ வெப் சீரீஸ்!!!

பரபரப்பான திருப்பங்கள் மற்றும் சுவாரஸ்யமான கதைக்களம் கொண்டு தயாரிக்கப்பட்ட வெப் சீரீஸ் ‘பாய்சன் 2’. இது முற்றிலும் பழிவாங்கும் த்ரில்லர் தொடர் ஆகும். இயக்குநர் விஷால் பாண்டியா இத்தொடரை இயக்கி உள்ளார். ஜீ 5 தளத்தில் விரைவில் வெளியாக உள்ளது.

இத்தொடரில் பிரபல நடிகர்கள் மற்றும் நடிகைகள் நடித்துள்ளனர். அப்தாப் சிவதசானி, ராய் லட்சுமி, பூஜா சோப்ரா ஆகியோர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மற்றும் ஜெய்ன் இமாம், வின் ராணா, அஸ்மிதா சூத், ராகுல் தேவ், தாஹிர்கான் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

பாலிவுட்டின் பிரபல நடிகர்களில் ஒருவர் அப்தாப் சிவதசானி. அவர் ‘அவாரா பாகல் திவானா’, ‘ஹங்காமா’, ‘மஸ்தி’, ‘மேஸ்ட்’ போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். அவர் நீண்ட காலத்திற்குப் பிறகு இத்தொடரில் நடித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து நடிகை ராய் லட்சுமி பாய்சன் 2 வெப் சீரீஸ் குறித்து தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் அவர் ‘துரோகத்தின் விளையாட்டு தொடங்கும் போது பழிதீர்ப்பு எப்போதும் முடியாது’ ஜீ 5 தளத்தில் விரைவில் ‘பாய்சன் 2’ வெப் சீரீஸ் என்று தெரிவித்துள்ளார்.

%d bloggers like this: