November 30, 2020

25 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் “ தில் வாலே துல்ஹனியா லே ஜாயங்கே”

ஷாருக்கான் – கஜோல் நடிப்பில் வெளியான தில்வாலே துல்ஹனியா லே ஜாயங்கே திரைப்படம் வெளியாகி தற்போது 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. 1995 ஆம் ஆண்டு ஆதித்யா சோப்ரா என்ற அறிமுக இயக்குனர் இயக்கத்தில் உருவான தில்வாலே துல்ஹனியா லே ஜாயங்கே என்ற திரைப்படத்தில் ஷாருக்கான், ராஜ்  என்ற கேரக்டரிலும் கஜோல் சிம்ரன் என்ற கதாபாத்திரத்திலும் நடித்திருந்தனர். படம் வெளியாகி சக்கைபோடு போட்ட நிலையில் அதன் பாடல்களும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்தத் திரைப்படம் வெளியாகி 1200 வாரங்களைக் கடந்தும் மும்பையில் உள்ள மராத்தா மந்திர் என்ற திரையரங்கில் ஓடியது அனைவரையும் பிரமிப்பில் ஆழ்த்தியது குறிப்பிடதக்கது.

மென்மையான காதலை மையமாகக் கொண்டு உருவான இந்த திரைப்படம் தற்போது தனது 25 ஆண்டினை நிறைவு செய்கிறது. இதனை நடிகர் ஷாருக்கானும், அவருக்கு ஜோடியாக அந்தப் படத்தில் நடித்த கஜோலும் தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் படத்தின் பாடலை பகிர்ந்து தங்களின் மகிழ்ச்சியை தெரிவித்துள்ளனர். இதனை அவர்களின் ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.



%d bloggers like this: