October 21, 2020

15ஆம் தேதி வெளியாகிறது மோடியின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம்…

இந்தியாவின் பதினான்காவது பிரதமராக பதவி வகிக்கும் திரு நரேந்திர மோடி அவர்களின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம் வரும் 15 ஆம் தேதி திரையரங்கங்களில் வெளியாக இருக்கிறது.

லெஜன்ட் க்ளோபல் ஸ்டூடியோஸ் பதாகையின் கீழ் சுரேஷ் ஓபராய், ஆனந்த் பண்டிட், ஆச்சர்யா மணீஸ், அமித் ஆகியோரின் கூட்டுத் தயாரிப்பில் உருவான இந்தப் படத்தில் விவேக் ஓபராய் நரேந்திர மோடியாக நடித்திருக்கிறார். ஹிந்தி மொழியில் வெளியாகவிருக்கும் இந்த படத்திற்கு பி.எம். நரேந்திர மோடி என பெயரிடப்பட்டுள்ளது. அமித்சாவாக மனோஜ் ஜோசியும், ரத்தன் டாடாவாக போமன் இராணியும் நடித்துள்ளனர்.

அனிருத் சாவ்லா மற்றும் விவேக் ஓபராய் ஆகியோரின் வசனத்தில் ஓமங் சாவ்லா இந்தப் படத்தை இயக்கி இருக்கிறார்.

தற்போது கொரோனா ஊரடங்கு தளர்வுகளில் திரையரங்கங்களை திறப்பதற்கு வரும் 15ஆம் தேதி முதல் அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், வரும் 15 ஆம் தேதி திரையரங்கங்களில் வெளியாக இருக்கிறது.

%d bloggers like this: