November 30, 2020

மீண்டும் துவங்குகிறது அல்லு அர்ஜூன் நடிக்கும் ”புஷ்பா” திரைப்படத்தின் படப்பிடிப்பு!!!

அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளிவரவிருக்கும் தெலுங்கு மொழி ஆக்‌ஷன் திரைப்படம் புஷ்பா.  ஒய்.நவீன் மற்றும் ஒய்.ரவிசங்கர் தயாரிப்பில், சுகுமாரின் திரைக்கதையில் தயராகி வரும் இந்த திரைப்படத்தில் அல்லு அர்ஜூனுடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா, தனஞ்ஜெய், ஜகாபதி பாபு, பிரகாஷ் ராஜ், ஹரிஷ் உத்தமன், வெண்ணல கிஷோர், அனுஷ்யா பரத் வாஜ், அனிஷ் குருவில்லா ஆகியோர் இணைந்து நடிக்கின்றனர். தேவி ஸ்ரீ பிரசாத் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

ஏற்கனவே இந்தப் படத்தின் சோதனை படப்பிடிப்பு கேரள மாநிலத்தின் அதிரப் பள்ளி அருவியில் படமாக்கப்பட்டது. தீபாவளியில் இந்தப் படம் வெளியாக இருந்த நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டது. தற்போது மீண்டும் படப்பிடிப்புக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதால் விஷாகப்பட்டினத்தில் வரும் நவம்பர் மாதம் 6ஆம் தேதி மீண்டும் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது.

%d bloggers like this: