November 25, 2020

செல்வராகவன் மற்றும் ஷாருக்கானின் உலக புகைப்பட தினப்பதிவு!!!

கலை, கைவினை, அறிவியல், வரலாறு என ஒவ்வொறு துறையிலும் புகைப்படம் ஒரு பிரிக்க முடியாத அங்கமாகிவிட்டது. இதை நினைவு கூறும் வகையில் ஆண்டு தோறும் இதே நாளில் புகைப்பட தினம் கொண்டாடப்படுகிறது.

அன்று 1837ல், லூயிஸ் டாகுவேர் மற்றும் ஜோசப் நைஸ்போரே நீப்ஸ் இந்த இரு பிரெஞ்சுக்காரர்களும் புகைப்பட செயல்முறைக்காக ’டாகுவெரோடைப்’பைக் கண்டுப்பிடித்தனர்.

பிறகு ஜனவரி 9, 1839 அன்று பிரெஞ்சு அறிவியல் அகாடமி அதன் செயல் பாட்டை அறிவித்தது. அதன் பிறகு ஆகஸ்ட் 19, 1839ல் பிரெஞ்சு அரசாங்கம் இந்தக் கண்டுபிடிப்பை உலக மக்கள் பயன்பாட்டுக்கு அளித்தது.

19ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு, புகைப்படம் ஒவ்வொறு துறையினராலும், ஓவ்வொறு தனிமனித வாழ்க்கையிலும் பிரிக்க முடியாத ஒரு அங்கமாக மாறிவிட்டது.

2011ல் தனுஷ் நடிப்பில், செல்வராகவன் இயக்ககத்தில் வெளிவந்த படம் ‘மயக்கம் என்ன’. இது ஒரு புகைப்படக் கலைஞனின் வாழ்க்கையைப் படம் பிடித்துக் காட்டியது. இன்று புகைப்பட தினத்தை முன்னிட்டு, இதை மேற்கோள் காட்டி தனுஷ் ரசிகர் ஒருவர் தன் டிவிட்டரில் உலக புகைப்படக் கலைஞர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். இந்த பதிவில் இயக்குநர் செல்வராகவன், நடிகர் தனுஷ், இசையமைப்பாளர் ஜி. வி. பிரகாஷ் மற்றும் சிலரையும் டேக் செய்துள்ளார்.

இதனை ரீ டிவீட் செய்துள்ள இயக்குநர் செல்வராகவன் தன் டிவிட்டர் பக்கத்தில் போட்டோகிராபி போலவே இந்த மயக்கம் என்ன படம் என் மனதிற்கு மிகவும் நெருக்கமானது எனக் குறிப்பிட்டு, புகைப்படக்கலைஞர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

இதைப் போலவே, ரெட் சில்லிஸ் எண்டர்டெயின்மெண்ட்டில் ஷாருக்கான் தான் எடுத்த புகைப்படத்தை தன் டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இது ஷாரூக்கானின் தயாரிப்பு நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு ரசிகர்கள் பலரும் மகிழ்ச்சியைத் தெரிவித்து வருகின்றனர்.
இதைப் போலவே, பலபிரபலங்கள்அவர்களின் டிவிட்டர் பக்கத்தில் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.


%d bloggers like this: