October 31, 2020

படபிடிப்பை முடித்த விஷால்!!!

அறிமுக இயக்குநர் எம்.எஸ்.ஆனந்தன் இயக்கத்தில், விஷால், ஸ்ரதா ஸ்ரீநாத், ரெஜினா கசாண்ட்ரா நடிப்பில் விரைவில் திரைக்கு வரவிருக்கும் திரைப்படம் சக்ரா.

சைபர் குற்றத்தை மையமாக வைத்து வெளிவரவிருக்கும் இந்த ஆக்ஷன் திரில்லர் திரைப்படத்தின் டிரெய்லர் கடந்த ஜூன் மாதம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

யுவன் சங்கர் ராஜா இசையில், விஷால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான விஷால் ஃபிலிம் பேக்டரி மூலம் தயாரிக்கும் இந்தப் படம் வரும் நவம்பரில் வெளிவர இருப்பதாக தெரிகிறது.

கொரோனா ஊரடங்கு தளர்வுகளில் தற்போது படப்பிடிப்புக்கு அனுமதி அளிக்கபட்ட நிலையில் சக்ரா படக்குழுவினர் தங்களது படப்பிடிப்பினை முடித்துள்ளனர். விரைவில் போஸ்ட் ப்ரொடெக்ஷன் பணிகள் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளில் வெளிவரவிருக்கும் சக்ரா படத்தின் டிரெய்லர் வெளியான முதல் நாளிலேயே 2.5 மில்லியன் பார்வைகளைக் கடந்தது குறிப்பிடத்தக்கது.

%d bloggers like this: