November 30, 2020

விர்ச்சுவல் முறையில் வெளியான விஜய்யின் ”குவிட் பண்ணுடா” பாடல்!!!

மாஸ்டர் திரைப்படத்திலிருந்து கடந்த 16ஆம் தேதி வெளியான பாடல் ”குவிட் பண்ணுடா”. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு பாக்யராஜ், மாஸ்டர் மகேந்திரன் உள்ளிட்டப் பிரபலங்கள் இணைந்து நடித்து விரைவில் வெளிவரவிருக்கும் திரைப்படம் மாஸ்டர். அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக மாஸ்டர் படத்தின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மாஸ்டர் திரைப்படத்திலிருந்து பாடல்கள் மட்டும் வெளிவந்த வண்ணம் இருக்கிறது. இதற்கிடையே இந்த மாதம் அக்டோபர் 16ஆம் தேதி அனிருத் பிறந்த நாளை முன்னிட்டு 16ஆம் தேதி குவிட் பண்ணுடா பாடல் வெளியானது. ஏற்கனவே மாஸ்டர் படத்தின் பாடல்கள் இணையத்தில் பட்டையை கிளப்பி வரும் நிலையில் குவிட் பண்ணுடா பாடல் 4.4மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது.

இதற்கிடையே நடன இயக்குநர் சதீஷ் விர்ச்சுவல் முறையில் குவிட் பண்ணுடா பாடலின் டான்ஸ் கவர் பாடலை வெளியிட்டுள்ளார். விர்ச்சுவல் முறையில் வெளியாகி இருக்கும் இந்தப் பாடலுக்கு சதீஷ் நடனம் அமைத்துள்ளார். குவிட் பண்ணுடா பாடலின் விர்ச்சுவல் டான்ஸ் கவர் காணொளி விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

%d bloggers like this: