November 25, 2020

கார்கில் போர் வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விக்ரம் பிரபு

விக்ரம் பிரபு “கும்கி” படத்தில் அறிமுகமாகி‌ அரிமா நம்பி, சிகரம் தொடு, சத்ரியன் என பல படங்களில் நடித்தவர். தான் நடித்த முதல் திரைப்படத்திலேயே சிறந்த அறிமுக நடிகருக்கான சைமா மற்றும் விஜய் தொலைக்காட்சி விருதுகளைப் பெற்றுள்ளார். இவர், நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும் பிரபுவின் மகனும் ஆவார்.

1999 இல் மே மாதம் 3ஆம் தேதி முதல் ஜூலை மாதம் 26ஆம் தேதி வரை கார்கில் போர் நடந்தது. இது இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே நடைபெற்ற உரிமைப் போராகும். இப்போரில் ஆயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் காயமடைந்தனர். மேலும் ஐநூற்றுக்கும் மேற்பட்ட வீரர்கள் மரணமடைந்தனர். ஜூலை மாதம் இறுதியில் இப்போரை இந்தியா வென்றது.

அதன் நினைவைப் போற்றும் வகையில் இன்று ஜூலை 26 கார்கில் போரில் வெற்றி பெற்றதை முன்னிட்டு அனைவரும் இராணுவ வீரர்களுக்கு தங்களது நன்றி மற்றும் மரியாதையைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் விக்ரம் பிரபுவும் தனது டிவிட்டர் பக்கத்தில், “இந்த வெற்றிக்காகப் போராடிய வீரர்களின் வீரம் பற்றி இன்னும் சில கதைகள் வலுவாகப் பொறிக்கப்பட்டுள்ளன. தைரியமான இதயங்களுக்கு ஆழ்ந்த மரியாதை” என்றவாறு குறிப்பிட்டு கார்கில் விஜய் திவாஸ் என ஹேஸ்டேக் செய்துள்ளார்.

%d bloggers like this: