November 30, 2020

விக்ரம்பிரபு நடிக்கும் ”பாயும் ஒளி நீ எனக்கு”!!! நவம்பரில் துவங்குகிறது படப்பிடிப்பு!!!

அறிமுக இயக்குநர் கார்த்திக் செளத்ரி இயக்கத்தில், மஹதி சக சாகர் இயக்த்தில், ஸ்ரீதரின்  ஒளிப்பதிவில், கோத்தகிரி வெங்கடேஸ்வர ராவ் எடிட்டிங்கில் விக்ரம் பிரபு நடிக்கும் திரைப்படம் பாயும் ஒளி நீ எனக்கு.  மஹா மகாலஷ்மி ஆர்ட்ஸ் பதாகையின் கீழ் இந்தப் படத்தை குமாரசாமி பதிகொண்டா தயாரிக்கிறார். ரமேஷ் நுகவள்ளி இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தில் விக்ரம் பிரபுவுடன் இணைந்து வாணி போஜன், தனஞ்ஜெயா ஆகியோர் இணைந்து நடிக்க இருக்கின்றனர்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு வரும் நவம்பர் மாதம் துவங்க இருக்கிறது. விக்ரம்பிரபு நடிப்பில் இந்த ஆண்டு வானம் கொட்டட்டும், அசுரகுரு உள்ளிட்ட படங்கள் வெளியானது. இதனைத் தொடர்ந்து தற்போது பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

%d bloggers like this: