November 25, 2020

விக்ரம் பிரபுவின் ’அசுர குரு’ நெட்பிளிக்ஸில் வெளியாகிறது!!!

விக்ரம் பிரபு, மஹிமா நம்பியார் நடிப்பில் இந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியான ஆக்‌ஷன்-த்ரில்லர் திரைப்படம் அசுர குரு. யோகி பாபு, மனோபாலா, சுப்புராஜூ, ஜாங்கிரி மதுமித்தா, ஜெகன் மற்றும் மேலும் பலர் இணைந்து நடித்திருந்தனர்.

ராஜ் தீப் இயக்கிய இந்த திரைப்படத்தை, ஜே.எஸ்.பி.சதீஷ், ஜே.எஸ்.பி பிலிம் ஸ்டூடியோஸ் பேனரில் தயாரித்திருந்தார். கபிலன் வைரமுத்து மற்றும், சந்துரு மாணிக்கவாசகம் வசனத்தில், லாரண்ஸ் கிஷோரின் எடிட்டிங்கில், கணேஷ் ராகவேந்திராவின் இசையில் வெளியான இந்த திரைப்படம் மார்ச் மாதம் 13-ஆம் தேதி வெளியானது. .

வெளியான 12 நாட்களுக்குள்ளாகவே கொரோனா ஊரடங்கின் காரணமாகத் திரையரங்குகள் மூடப்பட்டது. தற்போது வரை ஐந்தாம் கட்டாமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாலும், திரையரங்கங்கள் திறப்பது குறித்து எந்த அறிவிப்பும் வெளிவராத காரணத்தாலும், சில திரைப்படங்கள் நேரடியாக டிஜிட்டல் தளமான அமேசான் பிரைம், மற்றும் நெட்பிளிக்ஸில் வெளியாகிறது. சமீபத்தில் ஜோதிகாவின், பொன் மகள் வந்தால் அமேசான் பிரைமில் வெளியானது. இதே போலக் கீர்த்தி சுரேஷின் பெண்குயின் திரைப்படமும் அமேசான் பிரைமில் வெளியாகிறது.

இதற்கிடையே அசுர குரு திரைப்படம் வரும் 13ஆம் தேதி நெட்பிளிக்ஸில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வெளியாகி 3 மாதங்கள் கழித்து அதே தேதியில் நெட்பிளிக்ஸில் வெளியாகும் இந்த திரைப்படத்தை திரையரங்கங்களில் பார்க்கத் தவற விட்டவர்கள் பார்த்து மகிழலாம்.

%d bloggers like this: