October 29, 2020

விஜய் சேதுபதி தயாரிப்பில் “யாருக்கும் அஞ்சேல்” ஃபர்ஸ்ட் லுக்!!!

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி, காயத்ரி மற்றும் மஹிமா நம்பியார் ஆகியோர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற “புரியாத புதிர்” திரைப்படத்தை இயக்கியவர் தான் ரஞ்சித் ஜெயக்கொடி.

அதன் பின், அவர் ஹரீஷ் கல்யாண், ஷில்பா மஞ்சுநாத் நடிப்பில் வெளிவந்த “இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்” என்ற திரைப்படத்தை இயக்கி தனக்கென்று ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கினார். இதனை தொடர்ந்து முழுக்க முழுக்க பெண்களை மையப்படுத்தி “யாருக்கும் அஞ்சேல்” என்ற த்ரில்லர் திரைப்படமொன்றை இயக்கியுள்ளார் ரஞ்சித் ஜெயக்கொடி. இதன் டைட்டில் போஸ்டரை கடந்த மார்ச் மாதம் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி மற்றும் சிம்பு வெளியிட்டனர்.

மேலும் இந்த டைட்டில் போஸ்டரில் இடம்பெற்றுள்ள “அல்லவை வெல்ல நல்லனவற்றின் அமைதி மட்டும் போதும்” என்ற வாசகம் ரசிகர்களிடையே திரைப்படத்தை பற்றிய எதிர்பார்ப்பையும் கூட்டியது.

இத்திரைப்படத்தில் பிந்து மாதவி மற்றும் தர்ஷனா பானி இருவரும் பிரதான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். சாம் இசையமைத்துள்ளார். விஜய் சேதுபதியின் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து தேவராஜலு மார்க்கண்டேயன் தயாரித்துள்ளார்.

மேலும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை விஜய் சேதுபதி அவர்கள் இன்று வெளியிடுவார் என்று ரஞ்சித் ஜெயக்கொடி அவர்கள் தன் டிவிட்டர் பக்கத்தில் கூறியிருந்தார்.

அதனை தொடர்ந்து, விஜய் சேதுபதி அவர்கள் தன் டிவிட்டர் பக்கத்தில் ‘யாருக்கும் அஞ்சேல்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு தனது வாழ்த்துக்களை கூறி படக்குழுவினர்களையும் டேக் செய்துள்ளார்.

பெண்களின் பிரச்சனைகளை மையப்படுத்தி திரைப்படம் எடுத்து வரும் ரஞ்சித் ஜெயக்கொடி அவர்களுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

%d bloggers like this: