November 30, 2020

முத்தையா முரளிதரனாக களம் இறங்குகிறார் விஜய்சேதுபதி

கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தில் மக்கள் நாயகன் விஜய் சேதுபதி முத்தையா முரளிதரனாக நடிக்க இருக்கிறார். விவேக் ரங்காச்சாரி அவர்கள் மூவி ட்ரெயின் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரித்து வரும் இந்த திரைப்படத்தை இயக்குநர் எம். எஸ். ஸ்ரீபதி அவர்கள் இயக்குகிறார். இந்தப் படத்தைப் பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

முன்னாள் கிரிக்கெட் சுழற்பந்து வீச்சாளர் திரு முத்தையா முரளிதரன் ஒரு இலங்கை தமிழர் ஆவார். இவருக்கு மூன்று சகோதரர்கள் உள்ளனர். இவருடைய தந்தை லக்கி லேண்ட் பிஸ்கட் கம்பெனியின் உரிமையாளர் ஆவார். இவர் கிரிக்கெட்டில் பல உலக சாதனைகளை படைத்துள்ளார். ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் மொத்தமாக 534 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையை இவர் படைத்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் மொத்தமாக 800 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். தேர்வு கிரிக்கெட் போட்டிகள், ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள், டி20 போட்டிகள் என மொத்தமாக 1347 விக்கெட்டுகளை வீழ்த்திய ஒரே வீரர் என்ற சாதனையை இவர் படைத்துள்ளார். தேர்வு கிரிக்கெட் போட்டிகளில் ஒரு போட்டியில் 10 விக்கெட்டுகளை வீழ்த்திய ஒரே கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் ஒரே போட்டியில் 10 விக்கெட்டுகளை எடுக்கும் விதமாக மொத்தமாக 22 போட்டிகளில் இவர் சாதனை படைத்துள்ளார்.

இது போன்ற பல உலக சாதனைகளை படைத்த திரு முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக எடுக்கப்பட்டு வருகிறது. இந்த திரைப்படத்தில் முத்தையா முரளிதரன் ஆக மக்கள் நாயகன் விஜய் சேதுபதி அவர்கள் நடிக்க இருக்கிறார். மேலும் இந்த திரைப்படத்தைப் பற்றி பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

%d bloggers like this: