விஜய் ஆண்டனியின் அடுத்த பட அறிவிப்பு

தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமாகி தற்போது நடிகர், பின்னணி பாடகர், தயாரிப்பாளர் எனப் பல அவதாரங்களை எடுத்துள்ளார் விஜய் ஆண்டனி. இவர் இசையமைத்து வெளியான முதல் திரைப்படம் நடிகர் விஜய் நடித்த சுக்கிரன் படமாகும். அதன் பிறகு டிஷ்யூம், மரியாதை, நினைத்தாலே இனிக்கும், வேட்டைக்காரன் எனப் பல திரைப்படங்களுக்கு இசையமைத்திருக்கிறார் . பிறகு நான் படத்தின் மூலமாக நடிகராக அறிமுகமாகி சலீம், இந்தியா பாகிஸ்தான், பிச்சைக்காரன், சைத்தான் , எமன், அண்ணாதுரை, கொலைகாரன், காளி, திமிரு பிடிச்சவன் என 9 படங்களில் நடித்துள்ளார். ஒவ்வொரு படமும் வித்தியாசமான திரைக்கதை, புதிய கதாபாத்திரம் அறிமுகம் என இவரின் திரைப்படங்களில் பல புதுமைகள் இருக்கும்.
இந்நிலையில் விஜய் ஆண்டனி அடுத்து என்ன படம் நடிக்கப் போகிறார்? அந்த படத்தின் பெயர் என்னவாக இருக்கும் என்று பலரும் எதிர்பார்த்துக் காத்திருந்த நிலையில் தற்போது அது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது.
வரும் ஜீலை 24 ஆம் நாள் விஜய் ஆண்டனி தனது 45 ஆவது பிறந்த நாளைக் கொண்டாட உள்ளார். அன்று இவர் நடிக்கும் பத்தாவது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிவிப்பில் ‘ மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தொடர்ச்சியான ஃபிளாக்பஸ்டர் திரைப்படம் ‘ என்று குறிப்பிடப்பட்டுள்ளதால், விஜய் ஆண்டனியின் முந்தைய படங்களின் இரண்டாம் பாகமாக இருக்கலாம் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
1st look of @vijayantony 's Highly anticipated sequel & sensational blockbuster movie to be revealed on his bday July 24th @mrsvijayantony@vijayantonyfilm @DoneChannel1 #VAP10 pic.twitter.com/xwgOXQdq9M
— Done Channel (@DoneChannel1) July 18, 2020