January 18, 2021

விஷால் மற்றும் ஆர்யா நடிக்கும் படத்தின் டிரெய்லர் வெளியாகிறது!!!

அரிமா நம்பி, இருமுகன், நோட்டா ஆகிய திரைப்படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்கும் புதிய படத்தில்  முன்னனி நடிகர்களான ஆர்யாவும், விஷாலும் இணைந்தும் நடிக்கும் படத்தை இயக்க இருக்கிறார். இந்தப் படத்தை வினோத் குமார் தயாரிக்கிறார்.

ஆர்யா தற்போது டெடி திரைப்படத்திலும், 3 தேவ் என்ற இந்திப் படத்திலும் நடித்து வருகிறார். இதே போல விஷால் துப்பறிவாளன் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திலும், சக்ரா திரைப்படத்திலும் நடித்து வருகிறார். ஆர்யாவும், விஷாலும் இணையப் போகும் இந்த படத்தின் பெயர் மற்றும் பிற நடிகர்கள் பற்றிய இதுவரை அறிவிக்கப்படாத நிலையில் வரும் 25ஆம் தேதி புதன் கிழமை மாலை 5 மணிக்கு வெளியாக இருக்கிறது. மேலும் இந்தப் படம் ஆர்யாவுக்கு 32வது படமாகும். அதே போல விஷாலுக்கு இது 30வது படமாகும். இவர்களுடன் டப்ஸ்மேஷ் புகழ் மிருனாளினியும் இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆக்‌ஷன் த்ரில்லர் திரைப்படமான இந்தப் படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.

%d bloggers like this: