December 3, 2020

வரலட்சுமியின் புதிய படம் டேனி!!! ரசிர்களிடம் வரலட்சுமி வேண்டுகோள்!!!

டேனி ஜீ 5 தமிழ் இணையத்தளத்தில் நாளை முதல் வர இருக்கும் புதிய திரைப்படம். இந்த படத்தைச் சந்தான மூர்த்தி இயக்கி , திரைக்கதை எழுதி உள்ளார். வசனம் சந்தான மூர்த்தி மற்றும் பாரதி தம்பி, பாடல் வரிகள் தனிக்கொடி, நடன இயக்குநர் ரகுவரன், இசையமைப்பாளர் சாய் பாஸ்கர்.

ஜீ 5யில் வெளிவர இருக்கும் இந்த படத்தில் வரலக்ஷ்மி, யோகி பாபு, சாயாஜி ஷிண்டே, வேல ராமமூர்த்தி, அனிதா சம்பத், ராமர் மற்றும் பலர் நடித்து உள்ளனர். கொலையை விசாரிக்கும் காவல்துறை அதிகாரியாக வரலக்ஷ்மி நடித்து உள்ளார். டேனி என்ற காவல்துறை நாயைச் சுற்றித் தான் கதை வலம் வருகிறது. இது புதிர் த்ரில்லர் படம்.

இதற்கிடையே வரலட்சுமி தனது டிவிட்டர் பக்கத்தில், ”ஜீ 5யை அனைவரும் பதிவிரக்கம் செய்து இருப்பீர்கள் என நம்புகிறேன். இது இணையதளத்தில் வெளியாகும் என்னுடைய முதல் தமிழ்ப் படம். இதற்கு ஆதரவும், வாழ்த்துக்களும் தந்து இதை அனைவரும் வெற்றி அடைய செய்வீர்கள் என நான் நம்புகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

%d bloggers like this: