November 26, 2020

நேர்மறை எண்ணங்களையும் அன்பையும் பகிரும் வரலக்ஷ்மி!!!

நடிகை வரலக்ஷ்மி சரத்குமார், பிரபல தமிழ் நடிகர் சரத்குமாரின் மகள் ஆவார். இவர் தமிழ், மலையாளம் மற்றும் கன்னட மொழி படங்களில் நடித்து வருகிறார்.போடா போடி என்னும் தமிழ் திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார்.

விக்ரம் வேதா, சத்யா, சண்டக்கோழி 2, மாரி 2 மற்றும் சர்க்கார் போன்றவை இவரது தமிழ் வெற்றித் திரைப்படங்களாகும். சிறந்த அறிமுக நடிகைக்கான விஜய் விருது, எடிசன் விருது, தென்னிந்தியச் சர்வதேச திரைப்பட விருதுகள் மற்றும் சிறந்த எதிர்மறைக் கதாப்பத்திரத்திற்கான ஆனந்த விகடன் விருது போன்ற பல விருதுகளைப் பெற்றுள்ளார்.

இவர் தற்போது தனது டிவிட்டர் பக்கத்தில் இயற்கை எழிலுடன் எடுத்த தனது புகைப்படங்களை வெளியிட்டு, “பசுமையையும், பூக்கள் மலரும் தருணத்தையும் உணர்கிறேன். சென்னையின் வானிலையை மிகவும் ரசிக்கிறேன். மேலும் உங்கள் அனைவருக்கும் என்னுடைய நேர்மறை எண்ணங்களையும் அன்பையும் அனுப்புகிறேன்… இன்றைய காலகட்டத்தில் இது அனைவருக்கும் தேவையானது தான்”  என்று குறிப்பிட்டு லாக் டவுன் டையரிஸ் என்று ஹேஸ் டேக் மூலம் பதிவிட்டுள்ளார்.

%d bloggers like this: