December 3, 2020

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவிய வரலக்ஷ்மி!!!

இந்தியா முழுவதும் தற்போது கொரோனா பரவல் உச்சத்தை எட்டி உள்ளது. மேலும் ஊரடங்கு காரணமாக பல தொழிலாளர்களும் வேலை இழந்து தவித்து வருகின்றனர். மேலும் இந்தியா முழுவதும் பல வெளி மாநில தொழிலாளர்களும் வேலை இழந்ததால் தங்களின் சொந்த ஊருக்கு செல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளனர்.

தமிழகத்தில் பல வெளி மாநில தொழிலாளர்கள் வேலை இழந்து அவர்களின் சொந்த ஊருக்கு புலம் பெயர்ந்து வருகின்றனர். அவர்களுக்காக சிறப்பு இரயில்களும் இயக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு புலம் பெயரும் தொழிலாளர்களுக்கு பல தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் உணவுப் பொருள்களை வழங்கி அவர்களை வழியனுப்பி வருகிறார்கள்.

இந்நிலையில் நேற்று சென்னையில் இருந்து மேற்கு வங்கத்திற்கு ரயிலில் சுமார் 1600 தொழிலாளர்கள் புலம் பெயர்ந்தனர். புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் ஃசேவ் சக்தி பவுண்டேஷன் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் உடன் இணைந்து அவர்களுக்கு 3 சப்பாத்திகள் , ஒரு தண்ணீர் பாட்டில், மற்றும் ஒரு சிணிக்கர் அடங்கிய உணவு பொருள்களை வழங்கினார். இதை தன் டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் நடிகை வரலக்ஷ்மி. உணவு வழங்கி உதவி செய்த வரலஷ்மிக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

%d bloggers like this: