December 3, 2020

தொடர்ந்து சமூக சேவைகளில் ஈடுபட்டு வரும் பிரபல நடிகை!!!


‘போடா போடி’ எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானவர் வரலக்ஷ்மி. இவர் நடிகர் சரத்குமாரின் மகள் ஆவார். விக்ரம் வேதா, சத்யா, சண்டக்கோழி 2, மாரி 2 மற்றும் சர்க்கார் திரைப்படங்கள் தமிழில் இவருக்கு மிகப் பெரிய வரவேற்பை பெற்றுத் தந்தது. மேலும் இவர் மலையாளம் மற்றும் கன்னட மொழி படங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் வரலஷ்மியின் நடிப்பில் க்ரைம் த்ரில்லர் திரைப்படமான ‘டேனி’ திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

நடிப்பு மட்டுமின்றி ‘சேவ் ஷக்தி அறக்கட்டளை’ மூலம் சமூக சேவைகளும் செய்து வருகிறார். சேவ் ஷக்தி அறக்கட்டளையின் நிறுவனராக பல உதவிகள் செய்து பாராட்டும் பெற்றுள்ளார். லாக்டவுனால் அவதி பட்ட புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உணவு வழங்கியது பெரிதும் பாராட்டபட்டது.

தற்போது சேவ் ஷக்தி அறக்கட்டளை மூலம் தெருவில் நடமாடும் வாயில்லா ஜுவன்களுக்கு உணவு வழங்கியுள்ளார்.

இது குறித்து நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் தன் டிவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.

அதில் அவர் ‘சேவ் ஷக்தியில் நடந்த களப்பயணத்திற்கு தங்கள் குழந்தைகளை அழைத்து வந்த பெற்றோருக்கு நன்றி… எங்கள் வாயில்லா ஜீவன்களுடன் எங்கள் குழந்தைகள் கொண்டிருந்த ஒரு அற்புதமான தொடர்பு… எங்கள் குரலற்ற விலங்கு நண்பர்களை நேசிக்கவும் பராமரிக்கவும் எங்கள் அடுத்த தலைமுறையினருக்கு கற்பித்தல்’ என்று தெரிவித்து களப்பயணத்தின் போது எடுத்த காணொளியையும் பகிர்ந்துள்ளார்.

%d bloggers like this: