October 31, 2020

கண்ணாமூச்சி படம் மூலம் இயக்குநராக மாறும் வரலட்சுமி சரத்துகுமார்

நடிகர் சரத்குமாரின் மகள் வரலட்சுமி, 2008-ல் ‘போடா போடி’ படத்தின் மூலம் தமிழ் திரைத்துறைக்கு அறிமுகமாகி தாரை தப்பட்டை, விக்ரம் வேதா, சண்டக்கோழி 2, சர்க்கார் போன்ற படங்களில் தமிழில் முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்துள்ளார். தமிழில் கால் பதித்த கையோடு கன்னடம், மலையாளம் போன்ற பிறமொழிப் படங்களிலும் நடிக்கத் தொடங்கி பிலிம்பேர் விருது, எடிசன் விருது எனப் பல விருதுகளைப் பெற்றுள்ளார்.

இதற்கிடையே “லைம் லைட் பிக்சர்ஸ்” தயாரிப்பில் நிஜார் இயக்கும் “கலர்ஸ்” படத்தில் நடிகை வரலட்சுமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ராஜ்குமார் கதாநாயகனாக அறிமுகமாகும் இப்படத்தில் மொட்டை ராஜேந்திரன், இனியா உட்படப் பல நடிகர்கள் நடித்துள்ளனர்.

இந்நிலையில் வரலட்சுமி சரத்துகுமார் நடிகையாக இருந்து இயக்குநராக “கண்ணாமூச்சு” படத்தின் மூலம் அறிமுகமாகவுள்ளார். இப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் சார்ப்பில் எம். ராதா ராமநாராயணன் தயாரிக்கிறார். ஷாம் சி.எஸ் இசையமைக்கிறார். இ. கிருஷ்ணசாமி ஒளிப்பதிவு செய்கிறார். இப்படம் நடிகை வரலட்சுமியின் இயக்கத்தில் வரும் முதல் படம் என்பதாலும், ஹாரர் வகையைச் சேர்ந்த படம் என்பதாலும் இந்த படத்திற்கு இப்பொழுதே எதிர்ப்பார்ப்பு கூடியுள்ளது.

%d bloggers like this: