October 28, 2020

வனிதா விஜயகுமார் நடுவராக பங்கேற்கும் கலக்கப்போவது யாரு சீசன் 10!!!

கலக்கப்போவது யாரு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மேடை சிறப்புரை போட்டி நிகழ்ச்சி ஆகும். இதுவரை ஒன்பது சீசன்களை வெற்றிகரமாக கடந்துவிட்டது.

இதன் ஒன்பதாவது சீசன் இந்த வருடம் பிப்ரவரி மாதம் ஒன்பதாம் தேதி முதல் ஒளிபரப்பாகியது. இந்த நிகழ்ச்சியின் நடுவர்களாக தமிழ் நடிகை ரம்யா பாண்டியன், பிக் பாஸ் புகழ் வனிதா விஜயகுமார், ஈரோடு மகேஷ், மதுரை மகேஷ் மற்றும் ஆதவன் ஆகிய ஐவரும் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியினை அழகர் மற்றும் நவீன் ஆகியோர் தொகுத்து வழங்கினார்கள். தற்போது வனிதா விஜயகுமார் அவர்கள் தனது சமூக வலைத்தள பக்கத்தில் தன்னுடைய புகைப்படம் ஒன்றினை வெளியிட்டு கே.பி.ஒய் எனும் ஹேஷ்டேகையும் இணைத்துள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்க்கும் போது கலக்கப்போவது யாரு சீசன் 10 தொடங்கப் போவது போல் தெரிகிறது. மேலும் இவர் விஜய் தொலைக்காட்சியின் கலக்கப்போவது யார் செட்டில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படம் போல தோன்றுகிறது.

%d bloggers like this: