January 18, 2021

நடிகர் வையாபுரியின் புதிய திரைப்படத்தின் அறிவிப்பு வெளியானது!!!

இயக்குநர் விஜய் ஸ்ரீஜி இயக்கப் போகும் புதிய திரைப்படத்தை பற்றிய அறிவிப்பு சமூக வலைத்தளத்தில் வெளியாகி இருக்கிறது.

தாதா 87 என்ற திரைப்படத்தை இயக்கிய விஜய் ஸ்ரீஜி அவர்கள் தற்போது புதிய திரைப்படம் ஒன்றை இயக்க இருக்கிறார். இந்த திரைப்படத்தை ஜி மீடியா நிறுவனம் தயாரித்து வழங்க இருக்கிறது.

இந்த திரைப்படத்தில் பிக்பாஸ் புகழ் நட்பு நாயகன் வையாபுரி அவர்களும் கொஞ்சம் நடிங்க பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பெரிதும் அறியப்பட்ட ஆதவன் அவர்களும் நடிகை வித்யா பிரதீப் அவர்களும் மனோபாலா அவர்களும் நடிக்க இருக்கிறார்கள்.

இந்த திரைப்படத்தில் மேலும் யாரெல்லாம் நடிக்க இருக்கிறார்கள், இசை அமைக்கப்போவது யார் மற்றும் இதர விவரங்கள் எதுவும் தெரியவில்லை. இந்த திரைப்படத்தின் தலைப்பு மற்றும் கூடுதல் விவரங்களை விரைவில் அறிவிப்போம் என்று படக்குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள்.

வையாபுரி, ஆதவன், மனோபாலா ஆகியோரின் கூட்டணியை பார்க்கும்போது இந்த திரைப்படம் ஒரு முழு நீள நகைச்சுவை திரைப்படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


%d bloggers like this: