November 30, 2020

80 மில்லியன் பார்வைகளைக் கடந்த “வாத்தி கம்மிங்”!!!! மகிழ்ச்சியில் அனிருத்!!!

தளபதி விஜயின் நடிப்பில் வெளிவர இருக்கும் மாஸ்டர் திரைப்படத்தின் வாத்தி கம்மிங் பாடல் 80 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது.

அனிருத் ரவிச்சந்திரன் பாடல்கலுக்கென ரசிகர்கள் மத்தியில் எப்போதுமே ஒரு தனி எதிர்பார்ப்பு உண்டு. தளபதி விஜய் மற்றும் மக்கள் நாயகன் விஜய் சேதுபதி ஆகியோர் இணைந்து நடித்து வெளிவர இருக்கும் திரைப்படம் மாஸ்டர். இந்த திரைப்படம் இந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் வெளியாகும் என்று திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக இதன் வெளியீட்டுத் தேதி தள்ளிப் போடப்பட்டுள்ளது.

சேவியர் பிரிட்டோ அவர்கள் தனது எக்ஸ்பி பிலிம்ஸ் நிறுவனத்தின் மூலம் இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளார். தளபதி விஜய், மக்கள் நாயகன் விஜய் சேதுபதி, மாளவிகா மோகன், அர்ஜுன் தாஸ், ஆண்ட்ரியா ஜெரிமியா, சாந்தனு பாக்கியராஜ், நாசர், ரம்யா சுப்பிரமணியன், தீனா, சஞ்சீவ், ஸ்ரீநாத், ஸ்ரீமன் போன்ற பல முன்னணி நட்சத்திரங்கள் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளனர்.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கும் இந்த திரைப்படத்தின் ஒரு சில பாடல்களை மார்ச் மாதத்தில் படக்குழுவினர் வெளியிட்டு இருந்தார்கள். அனிருத்தின் இசையமைப்பில் வெளிவந்த இந்தப் பாடல்கள் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக வாத்தி கம்மிங் பாடல் 80 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது.இது படக்குழுவினருக்கும் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

%d bloggers like this: