October 28, 2020

மெட்டி ஒலி மாமியாரின் வீட்டில் நிகழ்ந்த சோகம்

மெட்டி ஒளியில் சரோவின் மாமியாராக நடித்த நடிகை சாந்தி வில்லியம்சின் மகனுக்கு உறங்கும் போதே திடீர் மாரடைப்பு ஏற்பட்டு அதன் காரணமாக உயிரிழந்ததாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகி இருக்கிறது.

திருமதி சாந்தி வில்லியம்ஸ் ஒரு புகழ்பெற்ற தொலைக்காட்சி நடிகை ஆவார். கோயம்புத்தூரில் ஒரு மலையாள குடும்பத்தில் பிறந்த இவர் தனது பன்னிரண்டாவது வயது முதல் தனது நடிப்பு பயணத்தை தொடங்கிவிட்டார்.

1970ஆம் ஆண்டில் வெளியான வியட்நாம் வீடு திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். அதன் பிறகு பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். தமிழ் மற்றும் மலையாளப்படங்களில் நடித்து வரும் இவர் 1999 ஆம் ஆண்டு ஒளிபரப்பாகிய சித்தி தொடர் மூலம் தொலைக்காட்சி தொடர்களில் நடிக்கத் தொடங்கினார்.

2002ஆம் ஆண்டு முதல் 2005ஆம் ஆண்டு வரை ஒளிபரப்பாகிய மெட்டி ஒலி தொடரில் சரோவின் மாமியாராக பயங்கரமான வில்லி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த கதாப்பாத்திரத்தின் மூலம் மக்களிடையே பெரும் அளவில் பேசப்பட்டார். அதற்குப்பின் பல தொடர்களிலும், பல திரைப்படங்களிலும் நடித்து வந்தார்.

இன்று இவருடைய மகன் சந்தோஷ் திடீர் மாரடைப்பு காரணமாக இறந்து விட்டதாக சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி இருக்கிறது. இவருடைய வயது 34 என கூறப்படுகிறது. உறங்கும்போதே திடீர் மாரடைப்பு ஏற்பட்டு அதன் காரணமாக உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இவருக்கு நட்சத்திரங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

%d bloggers like this: