November 1, 2020

முத்தையா முரளிதரண் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து வெளியிடும் மோஷன் போஸ்டர்!!!!

முன்னனி நடிகரான விஜய் சேதுபதி நடிப்பில் சமீபத்தில் க/பெ.ரணசிங்கம் திரைப்படம் ஓடிடியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தவிர விஜய் சேதுபதி இந்த வருடம் மட்டும் கடைசி விவசாயி, உப்பெனா, மாஸ்டர், லாபம், யாதும் ஊரே யாவரும் கேளீர், லால் சிங் சந்தா, துக்ளக் தர்பார், காத்து வாக்குல ரெண்டு காதல், கொரோனா குமார், இடம் பொருள் ஏவல் உள்ளிட்டப் படங்களில் நடித்து வருகிறார். மேலும் பெயரிடப்படாத ஒரு திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

இதற்கிடையே இலங்கை கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தில் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. முத்தையா முரளிதரனின் ஜெர்ஸி எண்ணான 800 என்பதைக் குறிப்பிட்டு நாளை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் இண்டியா மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழில் முத்தையா முரளிதரணும், விஜய் சேதுபதியும் இணைந்து நாளை மாலை 6 மணியளவில் மோஷன் போஸ்டரை வெளியிட உள்ளனர்.

தற்போது யூ.ஏ.யில் ஐ.பில் கிரிக்கெட் போட்டிகள் நடைப்பெற்று வரும் நிலையில் நாளை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ஐதராபாத் சன் ரைசஸ் அணியும் விளையாட இருக்கிறது. போட்டிகள் ஒளிபரப்பாவதற்கு முன்னதாக இந்த மோஷன் போஸ்டர் வெளியாக இருக்கிறது.

%d bloggers like this: