October 31, 2020

துப்பறிவாளன் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு களத்திலிருந்து புகைப்படம்

துப்பறிவாளன் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு தற்போது லண்டன் மாநகரில் நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பு களத்தில் எடுக்கப்பட்ட தனது புகைப்படம் ஒன்றினை தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார் நடிகர் பிரசன்னா.

2017ஆம் ஆண்டு இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் துப்பறிவாளன். நடிகர் விஷால் தனது விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்தின் மூலம் தயாரித்த இந்த திரைப்படம் வணிக ரீதியான வெற்றியை பெற்றது. இந்த திரைப்படத்திற்கு ஆரொல் கோரல்லி இசையமைத்திருந்தார். நடிகர் விஷால், பிரசன்னா, வினை, அனு இம்மானுவேல், ஆண்ட்ரியா ஜெரிமியா, கே. பாக்யராஜ், ஜான் விஜய், வின்சென்ட் அசோகன், சிம்ரன், ஆடுகளம் நரேன், அஜய் ரத்னம், தலைவாசல் விஜய் ஆகியோர் இந்த திரைப்படத்தில் சிறப்பாக நடித்திருந்தார்கள்.

இந்த திரைப்படத்தின் தொடர்ச்சியாக தற்போது துப்பறிவாளன் 2 எடுக்கப்பட்டு வருகிறது. இந்த திரைப்படத்தை நடிகர் விஷால் அவர்கள் தனது விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்தின் மூலம் தயாரித்து வருகிறார். மிஷ்கின் கதை எழுதி இருக்கும் இந்த படத்தினை நடிகர் விஷால் அவர்கள் இயக்குகிறார். இந்த திரைப்படத்திற்கு இசைஞானி இளையராஜா அவர்கள் இசையமைக்கிறார்.

ஆக்சன் க்ரைம் த்ரில்லர் வகையை சேர்ந்த இந்த திரைப்படத்தில் விஷால், பிரசன்னா, ஆஷ்யா, நாசர், ஜெயப்பிரகாஷ், ரகுமான், கௌதமி, சுரேஷ் சக்ரவர்த்தி மற்றும் பலர் நடித்து வருகிறார்கள். இதன் படப்பிடிப்பு தற்போது லண்டன் மாநகரில் நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பு களத்திலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றினை தனது ட்விட்டர் பக்கத்தில் பிரசன்னா அவர்கள் பகிர்ந்துள்ளார்.

%d bloggers like this: