October 26, 2020

குடிப் போதையை ஒழிக்கும் விஜய்யின் குய்ட் பண்ணுடா பாடலின் இசை காணொளி வெளியானது

தமிழ்த் திரைத்துறையில் “ ராக் ஸ்டார் “ என்று அழைக்கப்படும் இசையமைப்பாளர் அனிருத் ரவிசந்தர் இன்று தனது 30வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.

அவருடைய பிறந்த நாள் ஸ்பெஷலாக, அவர் இசையமைத்துக் கொண்டிருக்கும் இளைய தளபதி விஜய்யின் மாஸ்டர் படத்தில் இருந்து “ குய்ட் பண்ணுடா” பாடலின் இசைக் காணொளியை, அந்த படக்குழு நேற்று அறிவித்தபடி இன்று இணையத்தில் வெளியிட்டுள்ளது.

எப்பொழுதுமே விஜய் ரசிகர்கள் எதிர்ப்பார்த்ததை தாண்டி இந்த பாடல் காணொளி பலதரப்பட்ட மக்களையும் கவர்ந்துள்ளது குறிப்பிடதக்கது.

இந்தப் பாடலில் விஜய்யின் நேர்த்தியான தோற்றம் இது வரை அவர் நடித்த படங்களில் இருந்து அவரை வித்தியாசப்படுத்திக் காட்டியிருப்பதாக ரசிகர்கள் தங்களின் கருத்துக்களை இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

அது மட்டுமின்றி அந்தப் பாடலின் வரிகள் இன்றைய இளைஞர்களை குடிப்போதையில் இருந்து விடுவிப்பது போல்அமைந்திருப்பது அனைத்து தரப்பினரையும் ஈர்த்துள்ளது. அது மட்டுமின்றி இந்தப் பாடலைப் போன்றே மாஸ்டர் படத்திலும் இன்றைய இளைஞர்களுக்கான செய்திகள் நிறையவே இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

தற்பொழுது இந்தப் பாடலின் இசைக் காணொளியை இசையமைப்பாளர் அனிருத் ரவிசந்தர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

%d bloggers like this: